உணவில் சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்குமா...
உணவில் சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை காரணமாக இந்நாட்களில் உடல் பருமன் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது.
எடை அதிகரிப்பு காரணமாக உடல் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறது. இதன் காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற கடுமையான பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் பருமனை போக்க அல்லது உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள் பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.
எனினும் பல எளிய இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம் (Weight Loss) என்பதை நம் மனதில் கொள்ள வேண்டும். உணவில் தேவையான மாற்றங்களைச் செய்து உடல் எடையை குறைக்கலாம்.
சில பிரத்யேக எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். எடை அதிகரிப்பதை விட எடையை குறைப்பது மிகவும் கடினமான ஒரு வேலையாகும்.
உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியை நாடுவது பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது. டயட்டில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
எண்ணெய் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம் என்ற கருத்து உள்ளது.
எனினும் உணவில் சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்கவும் தொப்பை கொழுப்பை கரைக்கவும் (Belly Fat Reeduction) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, ஃபிளாவனாய்டு ஃபீனாலிக் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற பண்புகளைக் கொண்ட எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வது எடையைக் குறைக்க உதவுகிறது.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயில் (Sesame Oil) பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதில் போதுமான அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இந்த எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.
நல்லெண்ணெயில் லிக்ரான் காணப்படுகிறது. இது கொழுப்பைக் குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் நன்மை பயக்கும்.
உடல் எடையை குறைக்க, நல்லெண்ணெயை சமையலில் பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் (Mustard Oil) கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் மிகக் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு. இதை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
கடுகு எண்ணெயில் உள்ள பண்புகள், உடலில் கூடுதல் கொழுப்பு சேர்வதைத் தடுக்க உதவுகிறது.
மேலும் கொழுப்பை எரிப்பதை துரிதப்படுத்துவதில் இது நன்மை பயக்கும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் உணவில் மட்டுமல்ல பல கடுமையான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள பண்புகள் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவுகின்றன.
ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவை உண்பது, மீண்டும் பசி எடுப்பதைத் தடுக்கிறது மற்றும் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தொப்பையை குறைக்க உதவுகின்றன.
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் கேப்ரிக் அமிலம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இது உடலில் சேரும் கூடுதல் கொழுப்பைக் குறைக்கவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
சமையலில் தேங்காய் எண்ணெயை எளிதாகப் பயன்படுத்தலாம்.
கொட்டைகள் மற்றும் விதைகளின் எண்ணெய்
உடல் எடையை குறைக்க உணவில் பாதாம், நல்லெண்ணெய் மற்றும் சூரியகாந்தி போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளின் எண்ணெயை பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய்களில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. அதில் உள்ள பண்புகள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகின்றன.
உடல் எடையை குறைக்க உணவில் தேவையான மாற்றங்களுடன், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இதற்கு மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.