தெரியாத நபர்களிடம் முதல் முறை பேசும்போது...

தெரியாத நபர்களிடம் முதல் முறை பேசும்போது...

இன்றைய சூழ்நிலையில் தெரியாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே திரும்ப பேசத் தயக்கம் காட்டும் நிலைமைதான் உள்ளது. காரணம் யாரை நம்புவது என்பதே தெரிவதில்லை.

தெரியாத நபர்களிடம் முதல் முறை பேசும்போது...

தெரியாத நபர்களிடம் எப்போதுமே முதல் முறை பேசும்போது ஒரு தயக்கம் இருக்கும். அந்த உரையாடலை எப்படி துங்குவது என்ற குழப்பம் இருக்கும். இந்த சூழ்நிலை பெரும்பாலும் தினசரி பயணிக்கும் பேருந்து, ரயில் , கால்டாக்ஸி, அலுவலகம் என தினமும் நம்முடன் பயணிக்கும் நபர்களிடமே தோன்றுகிறது. எனவே அவர்களுடன் எப்படி உங்களுடைய முதல் உரையாடலையே சிறப்பனதாக மாற்றுவது என்று பார்க்கலாம்.

இன்றைய சூழ்நிலையில் தெரியாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே திரும்ப பேசத் தயக்கம் காட்டும் நிலைமைதான் உள்ளது. காரணம் யாரை நம்புவது என்பதே தெரிவதில்லை. அதற்கு தினசரி நாம் பார்க்கும், படிக்கும் செய்திகளே சான்று.

 


அப்படியிருக்கும்போது, முதன் முதலில் ஒருவரிடம் உரையாடலை துவங்க வேண்டுமெனில் பாசிடிவான வார்த்தைகளோடு துங்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் அலுவலகம் சார்ந்த மீட்டிங் அல்லது கலந்துரையாடலுக்கு சென்றுள்ளீர்கள் எனில் அவர் பேசுவது சரியான கருத்து, உங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்படி சில பாசிடிவான விஷயங்களை கூறலாம்.

யாரேனும் உதவிக்காக காத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் நாம் பேச தயக்கம் காட்டுவது தவறு. இருப்பினும் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கையை அளிக்க ஃபார்மலாக பேசி அவர்களுக்கு உதவ வேண்டும். உதாரணத்திற்கு இந்த பாக்ஸை தூக்க முடியாமல் சிரமப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்... நான் உதவட்டுமா என்று கேளுங்கள். இப்படியான தொடக்கம் நன்மதிப்பை தரும்.

அடுத்ததாக இது எவ்வளவு தூரம் உதவும் எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்த அணுகுமுறையும் ஒருவருடனான நட்பை பாராட்ட உதவும். அதாவது , உங்களைப் பற்றிய சுய விவரங்களை அவர்களிடம் கூறி உரையாடலை துவங்க வேண்டும். என் பெயர் .... நான் இப்படி... இந்த வேலை செய்கிறேன் என கூறி பேசலாம். இதனால் அவர்களுக்கும் உங்களுடன் பேசுவதற்கான தயக்கம் களையலாம்.