
தொழிலதிபரின் வீட்டில் பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் மாயம்
குருநாகலில் தொழிலதிபருக்கு சொந்தமான 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரம்புகெதர, கலுகமுவவில் பகுதியிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களில் 16 பவுணுக்கம் மேல் எடையுள்ள தங்க நகைகள், 31,000 சிங்கப்பூர் டொலர்கள், 25,000 ஜப்பானிய யென் மற்றும் 13,000 சீன யுவான் ஆகியவை அடங்கும் என்று தொழிலதிபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு மட்டும் 7.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாக தொழிலதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.