எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையில் அல்லது சிறிய வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் உள்ள அனைத்து எரிபொருள் விற்பனை முகவர் நிலையங்களிலும் ஒரே பெறுமதியை எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படாத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விலைத்திருத்தம் அனைத்து எரிபொருள் நிறுவனங்களும் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் விலைத்திருத்தத்தினை மேற்கொண்டிருந்தது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்புக்கமைய இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் (LIOC) எரிபொருள் விலையினை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினோபெக் லங்கா நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தில் மாறுபாடு காணப்பட்டது.