இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்: இலங்கையின் தாக்கம் குறித்து வெளியான தகவல்..!

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்: இலங்கையின் தாக்கம் குறித்து வெளியான தகவல்..!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸின் பரவலை கண்டறிவதற்கான விசேட பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸை கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்: இலங்கையின் தாக்கம் குறித்து வெளியான தகவல் | Nipah Virus Reported Many Countrie Including India

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் ஜானகி அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.