பிரான்ஸில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு முகக் கவசம் இலவசம்!

பிரான்ஸில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு முகக் கவசம் இலவசம்!

பிரான்ஸின் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் உள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும் என்று மாகாண முதல்வர் வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) அறிவித்துள்ளார்.

இல் து பிரான்ஸ் மாகாணத்தில் உள்ள ஏறக்குறைய 500,000 உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த இலவச முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளன.

ஒருவருக்கு 2 எனும் அடிப்படையில், செப்டெம்பரில் பாடசாலை ஆரம்பமாகும் போது முகக்கவசங்கள் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நற்பணி மன்றங்களின் பொறுப்பில் உள்ள மாணவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.