வெளிநாட்டு வாழ் பெண் திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
நோர்வே நாட்டு இளம் தாய் ஒருவர் இலங்கை வந்துள்ள நிலையில் திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த தாய் நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நோர்வே நாட்டில் வசித்து வந்த இவர் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து திருகோணமலையில் கணவனுடன் வசித்து வந்ததுள்ளார்.
பின்னர் குடும்பமாக நோர்வே நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.