திருமணமாகி முன்றே நிமிடத்தில் விவாகரத்து ; திகைத்து நின்ற உறவினர்கள்!
மணமகன் திட்டியதற்காக திருமணமாகி முன்றே நிமிடத்தில் பெண் ஒருவர் விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விசித்திர சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துபாயில் ஒரு தம்பதி உறவினர்களை அழைத்து மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் அத்தம்பதி அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது மணமகள் திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவருக்கு கை கொடுத்து உதவி செய்வதற்கு பதில், மணமகன் மணப்பெண்னை திட்டிய சம்பவம் தான் விவாகரத்து செய்ய காரணமாகியுள்ளது.
இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகள் கீழே விழுந்தவுடன் கோபம் அடைந்த மணமகன், ''முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா'' என புத்தம் புது மனைவியை திட்டியுள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை தனது கணவர் முட்டாள் என்று கூறி அவமரியாதை செய்ததை மணமகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வாரோ என்று நினைத்த மணமகள், உடனே இந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து, தனக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்று கேட்டார்.
நீதிபதியும் அவர்களுக்கு உடனே விவாகரத்து வழங்கிவிட்டார். திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் துபாயில் இதுதான் மிகவும் குறுகிய கால திருமணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மணப்பெண்ணுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.