பேருந்துக்கான பயண அட்டைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டை வழங்கும் முறைக்கு பேருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம (shashi welgama) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தமது வருமானத்தைப் பாதுகாக்க பயண அட்டைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் சட்டவிரோத கட்டணங்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை தடுக்க பயண அட்டை மூலம் பணம் செலுத்துவதே ஒரே தீர்வு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதற்கமைய போக்குவரத்து அமைச்சு இது தொடர்பான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெல்கம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.