யாழில் நீரில் மூழ்கி ஒருவர் பலி..!

யாழில் நீரில் மூழ்கி ஒருவர் பலி..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கெருடாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் நீரில் மூழ்கி ஒருவர் பலி | Jaffna Death Investigation

மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.