அரச வங்கி ஒன்றில் டொலரின் விற்பனை விலை 340 ரூபாயைத் தாண்டியது
இன்று (19) அரச வங்கி ஒன்றில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 341.68 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அதன் கொள்முதல் விலை 332.14 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்றைய தினம் 338 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 328.2351 ரூபாயாகவும், விற்பனை விலை 338.0729 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (18) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 326.74 ரூபாயாகவும், விற்பனை விலை 334.26 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.