
மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் - தீவிர விசாரணையில் காவல்துறை..!
வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி நாவலடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தூக்கிட்ட நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான அலாப்தீன் (வயது - 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த வேளை கணவன் - மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலையாக இருக்கலாமா என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.