பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்..!

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்..!

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் (11) அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய யுவதிக்கு ஊசி ஏற்றிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருந்தார்.

பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற (21 வயது) யுவதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல் | Girl Death In Peradana Hospital

கடந்த 10ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மறுநாள் நோயாளர் காவு வண்டி மூலம் தனது தாயுடன் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது காலை 9:00 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட யுவதி மதியம் 12:30 மணியளவில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து யுவதியின் உடல் நீல நிறமாக மாறியதாகவும், இதனையடுத்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாதி ஒருவரால் இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தாயார் குற்றம்சுமத்தியுள்ளார். 

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல் | Girl Death In Peradana Hospital

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமளித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் குடும்பம் தன்னுடன் நட்புடன் பழகி வந்த குடும்பம் என்ற வகையில்,யுவதியின் மரணம் தொடர்பில் தனது ஆறுதல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த யுவதி கடந்த தேர்தலின் போது தமக்கு தேர்தல் பணிகளுக்கு உதவியதாகவும்,இதனால் அமைச்சர் என்ற வகையில் மரணத்திற்கான காரணத்தை இரண்டு வாரங்களில் முழுமையாக கண்டறிந்து தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.