ஏ9 வீதியில் விபத்து - இளைஞன் பலி..!

ஏ9 வீதியில் விபத்து - இளைஞன் பலி..!

வவுனியா ஏ9 வீதியில் அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில்  உந்துருளி  முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வானுடன் மோதுண்டு உந்துருளி  விபத்துக்குள்ளானது.

ஏ9 வீதியில் விபத்து - இளைஞன் பலி | A Young Man Died Vehicle Accident Vavuniya

இதன்போது  600மீற்றர் தூரம் வரையில் உந்துருளியை  தரையில் இழுத்துச்சென்றுள்ளாதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ்விபத்து சம்பவத்தில் உந்துருளியின்  சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய மூன்று வாகனங்களும் வவுனியா காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.