தலைகீழாய் மாறும் இரவு பகல்..! ஆபத்தில் மனித குலம்...

தலைகீழாய் மாறும் இரவு பகல்..! ஆபத்தில் மனித குலம்...

மனிதர்கள் நிலத்தடிநீரை உறிஞ்சுவது பூமியின் சூழற்சியையே பாதிக்கிறது என அதிர்ச்சிகர ஆய்வு முடிவு வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க புவி ஏர்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் மனிதர்களால் சகட்டு மேனிக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது பூமியின் சுழற்சியை பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993 தொடக்கம் 2010 வரையில் கிட்டத்தட்ட 2150 மில்லியன் தொன் நிலத்தடி நீரை வெளியேற்றி கடலில் கலக்கச் செய்திருக்கிறோம் எனக் கூறுகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதனால், பூமி நிலத்தடி நீர் இன்றி வறண்டு விடுமென்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் கண்ணுக்கு எளிதாக புலப்படாத பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது தான் ஆய்வில் வெளியாகி இருக்கும் அதிர்ச்சி தகவல்.

பூமியின் சுழற்சி கிழக்கு நோக்கி 80 சென்டிமீட்டர் வரை சாய்ந்து இருக்கிறது என சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பூமி ஏற்கனவே சாய்ந்து தானே சுழல்கிறது என்றால், ஆம் சூரியனை சுற்றி வரும் பூமி ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் தான் சுற்றுகிறது.

இந்த சாய்மானம் 23.5 டிகிரி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டது. இப்போது நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டதால் 80 சென்டிமீட்டர் வரையில் மேலும் சாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது

தலைகீழாய் மாறும் இரவு பகல்..! ஆபத்தில் மனித குலம் | Earth Tilted Earth Weather Update Climate Change

இரவும் பகலும் சரியாத் தானே சுழல்கிறது எனக் கேட்கலாம். இதில் ஆபத்து அது அல்ல. பருவகாலம் மாறுவது தான்.

இன்று பூமி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, பருவம் தவறிய மழை, வெள்ளம், வரட்சி என பல இயற்கை பேரிடர்களை சந்திக்கிறோம்.

இதில் கடல் மட்டம் உயர வெறுமனே பனிப்பாறைகள் உருகுவது மட்டுமல்ல, பூமியில் இருந்து நீர் எடுக்கப்படுவதும் காரணம் என இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்படி பூமி சாய்ந்து சுழல்வது அதிகரிக்கும் போது மே மாதத்தில் டிசம்பர் போல் குளிர் அடிக்கவும், டிசம்பர் மாதத்தில் மே மாதம் போல் வெயில் கொளுத்தினால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசிக்கவே முடியாது.

வடகோளத்தில் வெயில் கொளுத்தினால் பனிப்பாறைகள் என்னவாகும்? இப்படி நாலாபுறமும் பேரிடர்கள் பேராபத்தாக சுழலும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை குறைக்க நீரை உறிஞ்சுவதை குறைக்க வேண்டும். பூமியில் நீரை சேமிக்க நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.