பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(12.06.2023) ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று(09.06.2023) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கு கடந்த மாதம் 26.05.2023 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. 

2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று முன்தினம்(08.06.2023) வரை இடம்பெற்றது. 

இதன் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததுடன் பாடசாலையின் கற்பித்தல் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும்