
அனைவரையும் வியக்க வைத்த அப்பிளின் புதிய பரிணாமம்!
அப்பிள் நிறுவனம் இந்த வருடம் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அந்தவகையில் அப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pr)o எனும் நவீன ரக கருவி ஒன்றை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கருவியை கை அசைவு, கண்கள், குரல்பதிவு கட்டளை வாயிலாக கட்டுப்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
அப்பிள் விஷன் ப்ரோ-வில் 3d ஒளிப்பட கருவி உள்ளது. இதை வைத்து நீங்கள் சேமிக்க வேண்டிய முக்கியமான தருணத்தை 3d முறையில் படம் பிடிக்க முடியும்.
இந்த புரட்சிகரமான கருவி சுமார் 3499 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கருவி அடுத்த வருட தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் எனவும் அதனைத்தொடர்ந்து ஏனைய நாடுகளுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.