கனடாவில் பல ஆண்டுகளாக பணி புரிந்த இந்தியரை காணவில்லை..!

கனடாவில் பல ஆண்டுகளாக பணி புரிந்த இந்தியரை காணவில்லை..!

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். 

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அவர் அலுவலகத்துக்கு வராததால், அவரது அலுவலக ஊழியர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர்.

அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீதர் காணாமல் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அவருக்கு என்ன நடந்தது என தெரியவராததால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

ஸ்ரீதருடைய தொலைபேசி மற்றும் அவரது பர்ஸ் ஆகியவை அவருடைய அறையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அவரை தொடர்புகொள்வதில் சிக்கலையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீதர் மாயமான விவகாரம் தொடர்பாக காவல்துரையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.