60 ஆண்டுகளில் முதல் முறையாக வர்த்தக குறியை மாற்றியது 'நொக்கியா'

60 ஆண்டுகளில் முதல் முறையாக வர்த்தக குறியை மாற்றியது 'நொக்கியா'

பிரபல தொலைத்தொடர்பு சாதன தயாரிப்பாளரான நொக்கியா (NOKIA) 60 ஆண்டுகளில் முதல் முறையாக, தமது வர்த்தக குறியை முழுமையாக மாற்ற தீர்மானித்துள்ளது.

புதிய வர்த்தக குறியில் NOKIA என்ற வார்த்தையை உருவாக்கும் ஐந்து வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.

பழைய குறியீட்டில் நீல நிறத்தில் இருந்த நொக்கியா என்ற வர்த்தக நாமம் தற்போது இல்லை.

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா லுண்ட்மார்க், NOKIA ஒரு வணிக தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது என்று கூறுகிறார்.

பார்சிலோனாவில் திங்கள்கிழமை தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறும் வருடாந்திர மொபைல் வேர்ல்ட் [ mobile world ] மாநாட்டை முன்னிட்டு நிறுவனத்தின் வணிக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.