
இன்று முதல் சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்!
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக மாத்திரம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (1) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றை அணுகலாம்.
அத்துடன், அந்த திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைபேசி செயலியான "Exams SRILANKA" ஐ பயன்படுத்தலாம்.
தேவைப்படும் நேரத்தில் சமர்ப்பிப்பதற்காக, பரீட்சார்த்திகள் விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வைத்திருத்தல் அவசியமாகும்.
பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பல் 12 மணிக்கு மேல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதிகளை நீடிக்க எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவி்துள்ளது.