கால் ஆணியால் அவதியா? சில எளிய வைத்தியங்கள்!

கால் ஆணியால் அவதியா? சில எளிய வைத்தியங்கள்!

கால் ஆணி என்பது பாதத்தின் அடிப்பகுதியில் வரும் ஒரு சிறிய புண் ஆகும். பெரும்பாலும் கால் விரல்களுக்கு இடையில் தோன்றும். இருப்பினும் தடிமனாகும் போது ஆணி கால் வலியை உண்டு செய்யும்

கால் ஆணி என்பது பாதத்தின் அடிப்பகுதியில் வரும் ஒரு சிறிய புண் ஆகும். பெரும்பாலும் கால் விரல்களுக்கு இடையில் தோன்றும். இருப்பினும் தடிமனாகும் போது ஆணி கால் வலியை உண்டு செய்யும் 

கால் ஆணியை எளியமுறையில் சரி செய்யும் வழிமுறைகள்

  • அதிமதுரம் குச்சிகள் 3-4 அளவு எடுத்து அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து பேஸ்ட் போல் அரைத்து இதனை இரவு படுக்கைக்கு செல்லும் போது இதை செய்து வந்தால் கடினமான தோல் படிப்படியாக மென்மையாவதோடு கால் ஆணியும் குறைய தொடங்கும்.
  • அரை டீஸ்பூன் பப்பாளி சாறு எடுத்து கால் ஆணி மேல் தடவி வந்தால் பலன் கிடைக்கும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஈரத்துணியால் கால் ஆணியை துடைத்து பிறகு சாறு வைக்கவும்.
  • எலுமிச்சையை இரவு முழுவதும் வைக்க அசெளகரியமாக இருந்தால் ஒரு மணி நேரம் மட்டும் வைத்து எடுக்கலாம். குளிர்காலங்களில் எலுமிச்சையை நீண்ட நேரம் வைத்திருக்க கூடாது.
  • அரை டீஸ்பூன் இந்த சாறு எடுத்து கால் ஆணி மீது வைத்துவரலாம். நாள் ஒன்றுக்கு மூன்று முறை இதை செய்து வந்தால் குணமாகலாம்.
  • சிறிய துண்டு சாக்பீஸ் எடுத்து தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல் அரைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வரலாம். தொடர்ந்து இதை செய்துவந்தால் கால் ஆணி குணமாகும்.