தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியான கிசு கிசு போட்டோ

தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியான கிசு கிசு போட்டோ

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.

இதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்க, சட்டத்தரணி நிரோஷன பெரேரா மற்றும் சட்டத்தரணி அசேல ரேகவ ஆகியோரை கொண்ட மூவரடங்கிய குழு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலும் இந்தக் குழு விசாரணை நடத்தவுள்ளது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணைக் குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் வழங்கப்படும் அறிக்கையின் பின்னர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகக் குழு உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் தவறு அல்லது அலட்சியம் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.