நாளை முதல் தண்ணீர் கட்டணம்...

நாளை முதல் தண்ணீர் கட்டணம்...

நீர் கட்டண மறுசீரமைப்பின் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட நீர்க் கட்டணம், ஒக்டோபர் மாதக் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் [வணிக] பியல் பத்மநாத் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை 130 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி 5 அலகு நீரைப் பயன்படுத்தும் வீடொன்றுக்கு குறைந்தபட்ச நீர்ப் பாவனைக்கு இதற்கு முன்னர் செலுத்திய 123 ரூபா நீர்க் கட்டணம் 264 வீத அதிகரிப்புடன் 448 ரூபாவாக மாறியுள்ளது.

முதல் 5 அலகுகளுக்கு, அலகு ஒன்றுக்கு ரூ.12 ஆக இருந்து கட்டணம் ரூ.20 ஆகவும், 6 முதல் 10 அலகுகளுக்கு ரூ.27 ஆகவும், 11 முதல் 15 அலகுகளுக்கு ரூ.34 ஆகவும் வீட்டுப் பாவனைக்கான குடிநீர் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

16 முதல் 20 அலகுகளுக்கான தண்ணீர் கட்டணம் 68 ரூபாயாகவும், 21 முதல் 25 அலகுகளுக்கு யுனிட் ஒன்றிற்கான கட்டணம் 99 ரூபாயாகவும், 26 முதல் 30 அலகுகளுக்கு 150 ரூபாயாகவும், 31 முதல் 40 அலகுகளுக்கு 179 ரூபாயாகவும், 41 முதல் 50 அலகுகளுக்கு 204 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

51 முதல் 75 அலகிற்கான கட்டணம் 221 ரூபாயாகவும், 75 அலகிற்கான மேல் ஒரு யுனிட்டுக்கு 238 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டி உள்ளது.

அத்துடன், 25 அலகுகளுக்கு 100 ரூபாயாக இருந்த சேவைக் கட்டணம் 300 ரூபாயாகவும், 26 முதல் 30 அலகுகளுக்கு இருந்த ரூபாய் 200 சேவைக் கட்டணம் மற்றும், 31 முதல் 40 அலகுகளுக்கு இருந்த 400 ரூபாய் சேவைக் கட்டணம் 900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதுடன்,

41 முதல் 50 அலகு வரை 650 ரூபாயாக இருந்த சேவை கட்டணம் மற்றும் 51 முதல் 75 அலகுகளுக்கு 1000 ரூபாயாக இருந்த சேவை கட்டணம் 2,400 ரூபாயாகவும், 75 அலகுக்கு மேல் உள்ள பில்களுக்கு 1,600 ரூபாயாக இருந்த சேவை கட்டணம் 3,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் 900 ரூபாயாகவும், 41 அலகுகளில் இருந்து 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 வரை 650 ரூபாயாகவும், 51 முதல் 75 அலகுகளுக்கு 1000 ரூபாய் 2,400 ரூபாயாகவும், 75 அலகுக்கு மேல் உள்ள பில்களுக்கு 1600 ரூபாய் சேவைக் கட்டணம் 3,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தத்தின்படி, மாதமொன்றுக்கு 15 அலகு தண்ணீரைப் பயன்படுத்தும் சராசரி குடும்பத்திற்கு 347.20 ரூபாயாக இருந்த தண்ணீர் கட்டணம் கிட்டத்தட்ட 130 சதவீதம் அதிகரித்து 789 ரூபாயாக உள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)