மின் கட்டண அதிகரிப்பு குறித்த அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு குறித்த அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

அது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (08) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் திறைசேரி, மின்சக்தி அமைச்சு, மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் நடத்தப்பட உள்ளது.

மின் கட்டணத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக இங்கு இறுதி உடன்பாடு எட்டப்பட உள்ளது.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை மின்சார சபை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதுடன், பொதுமக்களின் கருத்துக்களும் அண்மையில் பெறப்பட்டன.

அதன்படி, இறுதிகட்ட கட்டண திருத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.