
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
றம்புக்கணை பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
றம்புக்கணை ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் அதிகபட்ச பலத்தை பயன்படுத்தினரா என்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க அனைத்து மக்களும் பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜகந்த அல்விஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, எரிபொருள் பௌசருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைக்க முற்பட்ட வேளையில் பொலிசார் குறைந்த பட்ச பலத்தை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.