விண்டோஸ் 11 பயனர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட நற்செய்தி

விண்டோஸ் 11 பயனர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட நற்செய்தி

இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.

விண்டோஸ் 11 பயனர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட நற்செய்தி
பிஷ்ஷிங்
உலகம் முழுவதுமே இணைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உண்மையான இணையதளங்கள் போலவே உருவாக்கப்பட்ட போலி தளங்களுக்கு இணையவாசிகளை வரவைத்து அவர்களுடைய தகவல்களை திருடுவது ஃபிஷ்ஷிங் எனப்படும். 

உதாரணமாக வங்கியின் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி அதில் பயனர்களின் வங்கி விவரங்களை டைப் செய்ய வைத்து அந்த தகவல்களை திருடலாம்.

இந்த தாக்குதல் ஸ்ட்ரீமிங் சேவைகள், வரி கட்டும் இணையதளங்கள் என பல இடங்களில் நடக்கிறது.
 
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இத்தகைய தாக்குதல்கலை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை விண்டோஸ் 11 பயனர்களுக்கு வெளியிடவுள்ளது. இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த அம்சத்தை நாம் கணினியில் ஆன் செய்து வைத்தால், பிஷ்ஷிங் தாக்குதல்களை நடத்தும் இணையதளங்கள், புரோகிராம்கள் பயனர்களுக்கு காட்டப்படும். இதன்மூலம் ஆபத்தான இணையதளங்களை பயனர்கள் தவிர்த்துவிடலாம்.

அதேபோல மைக்ரோசாஃப்ட் புதிய தகவல் என்கிரிப்ஷன் அம்சத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் விண்டோஸ் பயனர்களின்  சாதனங்கள் தொலைந்துபோனால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடி விடாமல் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.