நுவரெலியா வசந்த கால கொண்டாட்டத்தை சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடத்த நடவடிக்கை
இந்த முறை நுவரெலியா வசந்த கால கொண்டாட்டத்தை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வசந்த கால கொண்டாட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நுவரெலியாவிலுள்ள சகல உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் என்பவற்றுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்படும்.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.