ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி. எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை கிரான் கோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி. எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 510 மில்லிக்கிராம் ஹெரோயின், 610 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.