ஹொப்டன், புளுகலை வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹொப்டன், புளுகலை வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

லுணுகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹொப்டன், புளுகலை வனப்பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் விறகு சேகரிப்பதற்காக நேற்றைய தினம் அந்த வனப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார்.

பின்னர், அவரது உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை, பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்ப காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.