உங்கள் போனில் ஸ்டோரேஜ் இல்லை என கவலையே வேண்டாம்- ஆண்ட்ராய்டில் வரவுள்ள புதிய அம்சம்

உங்கள் போனில் ஸ்டோரேஜ் இல்லை என கவலையே வேண்டாம்- ஆண்ட்ராய்டில் வரவுள்ள புதிய அம்சம்

ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் போதாமல் போய்விடும்.  ஸ்டோரேஜை கிளியர் செய்வதற்கு நாம் அதிகம் பயன்படுத்தாத மொபைல் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்துகொண்டிருப்போம். மீண்டும் ஒரு கட்டத்தில் தேவைப்படும்போது அந்த செயலியை இன்ஸ்டால் செய்ய முயற்சித்தால் இடம் இருக்காது. 

இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு நாம் அதிகம் ஸ்டோரேஜ் உள்ள போன்களை வாங்க வேண்டும். ஆனால் இது எல்லோராலும் முடியாது. இந்நிலையில் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கூகுள், ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அம்சத்திற்கு ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது மூலம் மொபைல் செயலியின் ஸ்டோரேஜ் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நமது தனிநபர் தரவுகள் எதுவும் பாதிக்கப்படாது. 

 

 

ஸ்டோரேஜ்

 

இந்த அம்சத்தில் செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு பதில் ஆர்கைவ்ட் ஏபிகேவாக மாற்றிகொள்ள முடியும். அதன்பின் தேவைப்படும்போது செயலியை ரீஸ்டோர் செய்து மீண்டும் பழைய வடிவத்திற்கு கொண்டு வந்துவிடலாம்.

இந்த அம்சம் இந்த வருடத்தின் பின்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் இரண்டு பேருக்கும் பெரும் அளவில் பயன்படும். குறிப்பாக பயனர்கள் அதிகம் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்வதை தடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.