முச்சக்கர வண்டி - உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி, முச்சக்கர வண்டியுடன் மோதியதில் உந்துருளி சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி - பவ்வாகம பகுதியில் நேற்று (02) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னால் பயணித்த பாரவூர்தியை குறித்த உந்துருளி சாரதி கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உந்துருளி சாரதியின் கவனக்குறைவு மற்றும் அவர் போதையில் இருந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
