இந்தியாவின் சில மாநிலங்களில் நிலநடுக்கங்கள்!
இந்தியாவின் சில மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.
இதன்படி குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் இன்று காலை 7.40 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ தூரத்தில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக குறித்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.
அதேபோல் அசாம் மாநிலம் கரிம்கஞ்சை பிரதேசத்திலும் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அத்துடன் இமாச்சல பிரதேசத்திலும் இன்று 2.3 ரிக்டர் அளவுக்கோளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.