மின்சார உற்பத்திக்கான நீரை வழங்க முடியாத நிலை: குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மின்சார உற்பத்திக்கான நீரை வழங்க முடியாத நிலை: குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மின்சார உற்பத்திக்கு தேவையான உச்சபட்ச அளவிலான நீரை வழங்க முடியாதுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மின் உற்பத்திக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீர் வழங்கப்படுமாயின் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், மேலும் 3 மாதத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான நீர் இருப்பதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் டீ.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய வரட்சியான காலநிலை காரணமாக தொடர்ந்தும் நீடிக்குமானால் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துவதுடன், அதனை வீண் விரயமாக்குவதனை தவிர்க்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.