Update: கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு

Update: கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு

மாத்தறை - வெலிகம கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போயிருந்த இரண்டு பாடசாலை மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வெலிகம கடற்பகுதியில் 4 மாணவிகள் அவர்களது பெற்றோருடன் குறித்த பகுதியில் இன்று மதியம் நீராட சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து இரண்டு மாணவிகள் காப்பற்றப்பட்ட நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல்போயிருந்த மாணவிகளில் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள மாணவி ஆகியோர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.