கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை வெளியானது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை வெளியானது

கடந்த வருடம் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு 6 மாத காலப்பகுதியினில் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய மேம்பாட்டு அறிக்கை பொதுமக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம், தென் கிழக்கு ஆசியாவில் விசேடமான கலப்பு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பசுமையான மற்றும் தொலைநோக்குடனான நகரம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான முறைமையை கொண்டுள்ளது.

அதேவேளை, திட்டமிட்ட முறையிலான இந்த நகரம் உருவானதன் பின்னர், இலங்கையர்கள் கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் உட்பட சகல சேவைகளையும் குறைந்த செலவுடன் பெற முடியும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.