சுட்டிக் குழந்தையின் அதிசயிக்கும் ராஜ தந்திரம்: வேற லெவல் நகைச்சுவைக் காட்சி

சுட்டிக் குழந்தையின் அதிசயிக்கும் ராஜ தந்திரம்: வேற லெவல் நகைச்சுவைக் காட்சி

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை படுக்கையில் இருந்து கீழே இறங்க செய்த வேலையை பார்த்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும். வியப்பை அளிக்கு இந்த அற்புத வீடியோவை ஐபிஎஸ் ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவுக்கு இட்ட தலைப்பு, “முயற்சி செய்பவர்கள் தோற்று போக மாட்டார்கள்’ என்பதாகும்.

IPS ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ரு சுட்டிக் குழஃந்தையின் வீடியோவை ‘முயற்சி செய்பவர்கள் தோற்க மாட்டார்கள்’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இது அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோ மிகவும் வைரலாகியதுடன், பலர் இதற்கு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சுமார் பத்து மாத குழந்தை தனியாக படுக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அப்போதுதான் படுக்கையில் இருந்து இறங்க வேண்டும் என்று குழந்தைக்கு தோன்றியது. அதே நேரத்தில், மிகவும் பாதுகாப்பாக இறங்க வேண்டும் என்று நினைக்கிறது அக்குழந்தை. அந்த நினைப்பே நமக்கு ஆச்சர்யத்தை தருகிறது. படுக்கையின் உயரத்தை உணர்ந்த அந்த குழந்தை, முதலில் அங்கேயே அமர்ந்து சில கணங்கள் நின்று கீழே பார்ப்பதைக் காணலாம். இதற்குப் பிறகு, அவர் படுக்கையில் இருந்து கீழே இறங்குவதற்காக படுக்கையில் வைத்திருந்த போர்வையை கீழே போடுகிறார்.

துணிகளைக் கீழே எறிந்துவிட்டு இறங்க முடியாமல் போகும் போது, ​​படுக்கையில் வைத்திருந்த தலையணைகளை ஒவ்வொன்றாகக் கீழே போடத் தொடங்குவதைக் காணலாம். நிறைய போர்வைகளையும் தலையணைகளையும் கீழே போட்டு விட்டு, அதன் மீது கால வைத்து குழந்தை வசதியாக கீழே வந்ததை நீங்கள் பார்க்கலாம்.