பிரித்தானியா குடிவரவு சட்டத்தில் அதிரடி மாற்றம் ; புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய சிக்கல்

பிரித்தானியா குடிவரவு சட்டத்தில் அதிரடி மாற்றம் ; புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய சிக்கல்

பிரித்தானியாவின் புதிய குடிவரவு சீர்திருத்தங்கள், பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறைச் செயலாளர் Shabana Mahmood உறுதிப்படுத்தியுள்ள இந்த சீர்திருத்தங்களின்படி, காலவரையற்ற வதிவிட அனுமதி (ILR) பெறுவதற்கான தகுதி காலம் பெரிதும் மாற்றப்பட்டுள்ளது.

தகுதி காலம் நீட்டிப்பு United Kingdom-இல் திறமையான தொழிலாளர் விசா (Skilled Worker Visa) உள்ளிட்ட பெரும்பாலான பிரிவுகளுக்கு ILR பெறுவதற்கான தகுதி காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.

பிரித்தானியா குடிவரவு சட்டத்தில் அதிரடி மாற்றம் ; புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய சிக்கல் | New Problem For Migrant Workers Change In Uk Law

பராமரிப்புத் தொழிலாளர்கள் போன்ற பட்டப்படிப்பு நிலைக்கு கீழ் (RQF Level 6) பணிபுரிபவர்களுக்கு, இந்த காத்திருப்பு காலம் 15 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னோக்கிப் பொருந்தும் விதி புதிய சட்ட மாற்றங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கும் பின்னோக்கிப் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதனால் சுமார் 616,000 பராமரிப்புத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அகதிகளுக்கான புதிய நடைமுறை அகதி அந்தஸ்து இனி நிரந்தரமாக வழங்கப்படாது என்றும், அது தற்காலிக பாதுகாப்பு அடிப்படையிலானதாக மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

அகதி வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் ஒருமுறை மீளாய்வு செய்யப்படும். ILR பெறுவதற்கான மொத்த காலம் 20 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்க காலம் இந்த வாரம் திங்கட்கிழமை முதல் அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. விரிவான ILR சீர்திருத்தங்கள் 2026 இலையுதிர்காலத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.