போலி ஐபோனை கண்டறிவது எப்படி? என்னென்ன வித்தியாசம் உள்ளது தெரியுமா?

போலி ஐபோனை கண்டறிவது எப்படி? என்னென்ன வித்தியாசம் உள்ளது தெரியுமா?

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. இருந்த இடத்தில் இருந்தவாறே அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் அளவுற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் விதவிதமாக விட்டாலும் ஐபோனிற்கான மவுசு எப்பொழுதுமே குறைவதில்லை. ஆனால், ஐபோன்கள் வாங்குவதிலும் பல சிக்கல்கள் உள்ளது. போலி ஐபோன்கள் அதிகம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

மேலும், ஒரிஜினலை போலவே மிகவும் நேர்த்தியாக காணப்படும் போலி ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் அக்சஸரீஸை சில நேரங்களில் கண்டறிவது கடினம். அதிலும், குறிப்பாக ஐபோனின் பழைய மாடல்கள் என்ற பெயரில் அதிகமான போலிகள் விற்கப்பட்டு வருகின்றன.

அதே போல பெரும்பாலும் பல போலி விற்பனையாளர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தி ஐபோன்கள் மற்றும் சார்ஜர்கள் போன்ற போலி ஆப்பிள் தயாரிப்புகளை விற்று வருகின்றனர்.

இதில், உண்மையான ஐபோன் அல்லது ஆப்பிள் அக்சஸரீஸ்களை தான் ஒருவர் வாங்குகிறாரா என்பதை உறுதி செய்து கொள்ள சிலவற்றை இங்கே பார்ப்போம்,

ஐபோன் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் உண்மையா அல்லது போலியா என்பதை சரி பார்க்க மிகவும் பொதுவான வழி அதன் தோற்றத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் அதன் ஹார்டுவேர் மிகவும் ஸ்ட்ராங்காக கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் போலி ஐபோனில், அதன் ஹார்டுவேர் வீக்காக கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

எனவே, ஐபோனின் பாடி அல்லது அதன் ஹார்டுவேர் வீக்காக இருப்பதை காட்டும் வகையில் மெலிதாக இருந்தால் அது போலியானதாக இருக்க கூடும். அதை வாங்காமல் தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக, ஐபோன் மாடல்கள் எந்தெந்த கலரில் கிடைக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல வகையான மோசடியான வண்ணங்களில் போலியும் கிடைப்பது உண்டு. முக்கியமாக ஆப்பிள் நிறுவன தயாரிப்பை வாங்கும் முன் அதன் சீரியல் நம்பரை எப்போதும் சரிபார்க்க தவற கூடாது.

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று இதை கிராஸ் செக் செய்து கொள்ளலாம். மேலும் IMEI நம்பர் மூலம் உண்மையான ஆப்பிள் தயாரிப்பை அடையாளம் காண முடியும்.

போனின் செட்டிங்ஸ் சென்று General-ல் இருக்கும் About-ஐ பார்க்க வேண்டும். பட்டியலிடப்பட்ட IMEI நம்பர் தெரியும் வரை ஸ்க்ரால் செய்ய வேண்டும். குறிப்பிட்ட போனில் IMEI அல்லது சீரியல் நம்பர் இல்லாவிட்டால், அது போலி ஐபோன். ஐபோன் வாங்கும் போது அதன் iOS-யை சரிபார்க்க வேண்டும்.

போலி ஐபோனில் ஆண்ட்ராய்டையும் பயன்படுத்தி இருப்பார்கள். ஐபோனில் மட்டுமே வேலை செய்யும் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான Siri, போலி ஐபோன்களில் பெரும்பாலும் இருப்பதில்லை, எனவே Siri வேலை செய்கிறதா அல்லது இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடைசியாக ஐபோன்களுக்கான பவர் அடாப்டர்ஸ் மற்றும் சார்ஜர்ஸ் மிகவும் காஸ்டலியானவை. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

உதாரணமாக ஐபோனுக்கான 20W USB-C பவர் அடாப்டரின் விலை ரூ.1900. ஆனால் போலி ஆப்பிள் அக்சஸரீஸ் இதை விட மலிவு விலையில் இருக்கும் இதை வைத்தும் கண்டறியலாம். கவனமாக ஸ்டோர்களில் சென்று நீங்கள் ஐபோனை வாங்குவதே சிறந்ததாக இங்கே பார்க்கப்படுகிறது.