நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி சார்ஜா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வீரர் மஹீச் தீக்ஷனவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு பதிலாக பினுர பெர்ணான்டோ விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.