உலக டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஷ்லி பார்ட்டி விலகல்
உலக பெண்கள் டென்னிஸ் போட்டி உள்பட இந்த ஆண்டில் நடைபெறும் எஞ்சிய எந்த போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்று ஆஷ்லி பார்ட்டி கூறியுள்ளார்.
‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் இறுதி சுற்று போட்டி மெக்சிகோவில் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி காயம் காரணமாக நேற்று விலகினார்.
கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த உலக டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான 25 வயது ஆஷ்லி பார்ட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக பெண்கள் டென்னிஸ் போட்டி உள்பட இந்த ஆண்டில் நடைபெறும் எஞ்சிய எந்த போட்டியிலும் நான் கலந்து கொள்ளமாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.