லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நேற்று(21) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரித்துள்ளது

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 162 ஆக இருக்கும்.

அதேபோல், 111 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒடோ டீசலின் புதிய விலை 116 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.