அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை தொடங்கியது

அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை தொடங்கியது

கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகம் அட்சய பாத்திரமாக விளங்கியது. இந்த நிலையில் அம்மா உணவகங்களில் படிப்படியாக கூட்டம் குறைந்தது.


கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

 


தற்போது தனியார் ஆலையில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் மீண்டும் இரவு வேளைகளில் சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
 

மேற்கண்ட தகவல்களை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.