கேரளாவில் 80,262 பேருக்கு கொரோனா சிகிச்சை: இன்று 7,643 பேர் பாதிப்பு

கேரளாவில் 80,262 பேருக்கு கொரோனா சிகிச்சை: இன்று 7,643 பேர் பாதிப்பு

கேரளாவில் தற்போது 80,262 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரள மாநில இன்றைய கோரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 7,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

10,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 80,262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.