120 வாட் ஃபிளாஷ்சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஐகூ ஸ்மார்ட்போன்
விவோவின் ஐகூ பிராண்டு தனது 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. முன்னதாக இதேபோன்ற தொழில்நுட்பத்தை விவோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
ஐகூ இசட்1 5ஜி மாடலில் உள்ள 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றே இந்த தொழில்நுட்பமும் டூயல் சார்ஜிங் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இதன் 120வாட் இரண்டு 60 வாட்களாக இரட்டை சிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை சார்ஜிங்கின் போது அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது.
இந்த சார்ஜர் இன்டெலிஜண்ட் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது அதிக வெப்பம் ஆவதை தவிர்க்க செய்கிறது. 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் 6சி செல் அரே-டைப் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
ஸ்மார்ட்போனில் ஐகூ நிறுவனம் கிராஃபைட் ஹீட் டிசிபேஷன் ஃபிலிம் அளவை அதிகரித்துள்ளது. இத்துடன் சூப்பர்கன்டக்டிங் விசி லிக்விட் கூலிங் அமைப்பை மேம்படுத்தி இருக்கிறது.
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் ஆகலாம் என ஐகூ தெரிவித்து உள்ளது.