இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டிலும் ஒரே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சியால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நல்ல மழை பெய்து வந்தது. அடிக்கடி அரபிக்கடலிலும், வங்க கடலிலும் சிறிய அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலையும் உண்டாகி வந்தது.

இந்நிலையில் தற்போது வங்க கடலிலும், அரபி கடலிலும் ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு கடல்பகுதிகளிலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.