தீபாவளியை முன்னிட்டு இரவு வரை ரேசன் கடைகள்! – தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு இரவு வரை ரேசன் கடைகள்! – தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழக ரேசன் கடைகள் இயங்கும் நேரத்தை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதியன்று தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் மக்கள் இப்போதிருந்தே ஈடுபட தொடங்கியுள்ளனர். தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய பலர் ரேசனில் வழங்கப்படும் உணவுப் பொருட்களையே நம்பியுள்ள சூழலும் உள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் தொடக்கமே தீபாவளி வருவதால் அடுத்த மாத ரேசன் பொருட்களை மக்கள் சிரமமின்றி வாங்க ரேசன் கடை செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.