ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய மூன்று செயலிகளும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேல் முடஙகியது குறிப்பிடத்தக்கது.

 

உலக அளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவை மிகப் பெரிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. அவற்றில் மக்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, நேற்று நள்ளிரவு இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடங்கியது. இதனால் அதன் பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.

 

 

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதற்கு அந்நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விரைவில் இந்த குறை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து, சில மணி நேரத்தில் இன்ஸ்டாகிராம் சேவை சீரானது என அந்நிறுவனம் தெரிவித்தது.