பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கம் எதிரொலி!: ஒரே நேரத்தில் பயனர்களின் படையெடுப்பால் ஆட்டம் கண்ட ட்விட்டர்..!!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கம் எதிரொலி!: ஒரே நேரத்தில் பயனர்களின் படையெடுப்பால் ஆட்டம் கண்ட ட்விட்டர்..!!

பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவைகள் தடைப்பட்டதை கேலி செய்த ட்விட்டர் தளமும் அடுத்த சில மணி நேரங்களில் முடங்கியது. மார்க் சூகர்பெர்க்கின் சமூக வலைதள நிறுவனங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறால் நேற்றிரவு முதல் சேவை முடங்கியது. இதனால் ஆதங்கமடைந்த நெட்டிசன்கள், ட்விட்டரில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பதிவிட்டு முடங்கிய செயலிகளை கலாய்த்தனர். பயனாளர்களின் பதிவுகள் மற்றும் மீம்ஸ்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டர் நிறுவனமும் அனைவருக்கும் வணக்கம் என்று பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்தது.
 

ட்விட்டரின் பதிவுக்கு வாட்ஸ்ஆப் 'ஹலோ' மற்றும் இன்ஸ்டா 'ஹாப்பி மண்டே' என்றும் ரிப்ளை செய்தனர். இவை மட்டுமின்றி மெக் டொனால்ஸ், ட்ரு காலர் என பல்வேறு நிறுவனங்களும் ட்விட்டரின் பதிவில் கமன்ட் செய்து உரையாடினர். வழக்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவதை கண்ட பயனாளிகள், ஓர் இரவில் ட்விட்டரே ட்ரெண்டிங் ஆனதை கண்டனர். ஆனால் அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கம் திரும்பியதால் அதன் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.