நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹாவில் பதிவு

நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹாவில் பதிவு

நாட்டில் நேற்று பதிவான 2 ஆயிரத்து 953 கொவிட்-19 நோயார்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையின்படி கம்பஹா மாவட்டத்தில் 767 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பில் 312 பேருக்கும், களுத்துறையில் 440 பேருக்கும், கண்டியில் 117 பேருக்கும், குருநாகலில் 70 பேருக்கும், காலியில் 168 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 4 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

கேகாலையில் 45 பேருக்கும், புத்தளத்தில் 56 பேருக்கும், அநுராதபுரத்தில் 2 பேருக்கும், மாத்தறையில் 3 பேருக்கும், பொலனறுவையில் 16 பேருக்கும், அம்பாறையில் 294 பேருக்கும், நுவரெலியாவில் 9 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இரத்தினபுரியில் 91 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 22 பேருக்கும், பதுளையில் 60 பேருக்கும், மட்டக்களப்பில் 36 பேருக்கும், மொனராகலையில் 165 பேருக்கும், கிளிநொச்சியில் 53 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவில் 6 பேருக்கும், திருகோணமலையில் 28 பேருக்கும், மாத்தளையில் 128 பேருக்கும், வவூனியாவில் 41 பேருக்கும், மன்னாரில் 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.