சேதன பசளை பயன்பாடு அடுத்த மாதம் முதல் அறிமுகம்

சேதன பசளை பயன்பாடு அடுத்த மாதம் முதல் அறிமுகம்

எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பயிர் செய்கைகளுக்கு தற்போது பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் பசளைகள் தேவையாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தேவைக்கு ஏற்ப அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.